யாழில் முப்பது வயதுடைய பெண் ஒருவர் கைது!

Report Print Ajith Ajith in சமூகம்

யாழ்ப்பாணம் - திருநகர், ராஜசிங்கம் வீதியில் 7.520 கிராம் எடையுடைய பத்து சிறிய கஞ்சா பொதிகள், மதுவரி திணைக்கள அலுவலர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 30 அகவைக்கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அண்மைய நாட்களில் யாழ். குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் முப்படையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.