யாழில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு! பெருந்தொகை மாட்டிறைச்சி மீட்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பச்சைப்பள்ளிக்கு அருகாமையில், சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்ட 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில், குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது, முச்சக்கர வண்டியில் 100 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு செல்ல முற்பட்டவேளை, விஷேட அதிரடிப்படையினரால் குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இறைச்சியாக்குவதற்குத் தயார் நிலையில் இருந்த 33 ஆடுகளும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.