கண்டியில் மூவரின் உயிரை பலியெடுத்த அனர்த்தம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in சமூகம்

கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் உடைந்து வீழ்ந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளின் போது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்டிடம் உடைந்து விழும் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் அது தொடர்பில் ஏனையவர்களுக்கு அறிவிப்பது ஒருவரின் தார்மீக கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கண்டி, பூவெலிகட பிரசேதத்தில் ஐந்து மாடிக் கட்டிடமொன்று மற்றுமொரு கட்டிடமொன்றின் மீது உடைந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.