பலாங்கொட பகுதியில் மாணவி ஒருவர் சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

இரத்தினபுரி, பலாங்கொட- பின்னவலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், குறித்த மாணவியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இம்முறை கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவிருந்த 16 வயதான மாணவியே இவ்வாறு அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் மாணவியின் தாயார் வீடு திரும்பியபோது, ​​படுக்கையின் அருகே சடலமாக மாணவி கிடப்பதை கண்டு அருகில் உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, பலாங்கொட வைத்தியசாலைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.