யாழ். இளவாலை பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!

Report Print Ajith Ajith in சமூகம்
102Shares

யாழ்ப்பாணம் - இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று இந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய வெடிபொருள்களே பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று குறித்த வெடிபொருள்கள் மீட்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.