வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரை விரட்டியடித்த வைத்தியர்

Report Print Vethu Vethu in சமூகம்
792Shares

டுபாயில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் நாட்டுக்கு வந்த இலங்கை பணியாளர் ஒருவருக்கு வைத்தியர் உதவி செய்யாமையினால் காப்புறுதி இழப்பீடு பெற முடியாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை வெளிவிவகார பணியகத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட நபர் இழப்பீட்டினை பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.

அதற்காக வைத்தியர் ஒருவரின் பரிந்துரை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கமைய அவர் பரிந்துரையை பெற்றுக் கொள்வதற்காக முல்லேரியா வைத்தியசாவைக்கு சென்றுள்ளார்.

குறித்த பரிந்துரையை வழங்கும் வைத்தியர், வெளிநாட்டில் இருந்து வந்த நபரை திட்டி, அவரது ஆவணங்களை வெளியே எறிந்து அவரையும் வெளியேற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.

டுபாயில் சில மாதங்களுகு்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் இந்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். அந்த நாட்டில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் அண்மையில் அவர் நாடு திரும்பியுள்ளார்.