யாழ்ப்பாணம் - திருநகர்ப் பகுதியில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - திருநகர்ப் பகுதியில் வைத்து கஞ்சா போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், யாழ். ராஜசிங்கம் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மீட்கப்பட்ட 7.5 கிராம் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதுடன், இதன்போது அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் முப்படையினர் மற்றும் மதுவரித்திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.