கொழும்பில் கடத்தப்பட்ட கார் மட்டக்களப்பில்...

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாகரைப் பகுதியின் காயங்கேணி, காணிக்கோப்பையடி பகுதியில் வைத்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த காரொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கார் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த கார் கொழும்பு, வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதென காரினுள் இருந்த ஆவணங்களை வைத்து உறுதி செய்துள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வாழைச்சேனைக்கு பல வாகனங்கள் கடத்தப்பட்டிருப்பதாக வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த காரைக் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் கடத்தப்பட்டகார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கார் கடத்தல் தொர்பில் பலர்சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும், இந்த வாகனக்கடத்தல் கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள்என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.