பகிடிவதையை கட்டுப்படுத்துவதிலுள்ள நடைமுறை சிக்கல்: யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்றுக்குழு தலைவர்

Report Print Banu in சமூகம்

பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தயங்குவதாலும், தாம் இரண்டாம் ஆண்டுக்குள் செல்லும் போது மீண்டும் பகிடிவதையை செய்ய முற்படுவதாலுமே பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாக யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், ஒழுக்காற்றுக்குழுவின் தலைவருமான கோடீஸ்வரன் ருஷாங்கன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவரும் பாலியல் ரீதியான பகிடிவதைகள் தொடர்பாக வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழகங்களில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் போது அவர்கள் அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் எவ்விதமான முறைப்படுகளும் செய்வதில்லை.

மேலும் தமக்கு வழங்கப்பட்ட பகிடிவதையை அவர்களுக்கு பின் வரும் புதுமுக மாணவர்களுக்கு விதிக்கின்றனர். இதுவே காலம் காலமாக தொடர்ந்து வருகின்றது.

இதுவே பகிடிவதையை கட்டுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கலாகும்.

தற்போதைய ஜனாதிபதி பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக "Zero Tolerance" எனப்படும் எவ்வித விட்டுக் கொடுப்புக்களும் இல்லாத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் பின்னணியிலே அண்மைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறியுள்ளார்.