வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய 2241 மில்லியன் ரூபாய் கடனை கோரும் சதொச

Report Print Steephen Steephen in சமூகம்
59Shares

வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை சதொச நிறுவனம், மக்கள் வங்கியிடம் 2241 மில்லியன் ரூபாய் கடனை கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் விடயங்களை முன்வைத்துள்ளார்.

நான்கு மாதங்களுக்காக இந்த கடனை பெற்றுக்கொள்வதற்கான திறைசேரி பிணையை வெளியிடுமாறும் அவர் கேட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையான காலத்தில் அரிசி உற்பத்தியாளர்கள் சந்தையில் விநியோகித்துள்ள அரிசி போதுமானதாக இல்லை என்பதால், நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதனால், பாதுகாப்பான அரிசி தொயை அரசாங்கம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற யோசனையை அமைச்சர் முன்வைத்துள்ளார்.