மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக்குற்றிகள் மீட்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் - நானாட்டான் சந்திக்கு அருகில் 'வடக்கு வீதி' என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இடத்தில் காணியொன்றின் உரிமையாளரினால் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் இதன்போதே நாணய குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து உப தவிசாளர் புவனமால், முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த நாணயக் குற்றிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயக் குற்றிகள் யாவும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல்பொருள் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லயனல் தெரிவித்துள்ளார்.