வன்னிக்கான புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்

Report Print Theesan in சமூகம்

வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக லால் செனவிரத்தின இன்றைய தினம் தனது கடைமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வன்னி மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த தம்மிக்க பிரியந்த களுத்துறை பகுதிக்கு மாற்றலாகி சென்ற நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக கண்டியில் மோப்ப நாய்கள் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்து பின்னர் தகவல் தொடர்பாடல் ஊடக துறைக்கு பொறுப்பாக இருந்த லால் செனவிரத்தின நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இன்றையதினம் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வு கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் இதன்போது புதிய பொலிஸ் மா அதிபருக்கு அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மானவடு மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.