உடலில் தொலைபேசியை மறைத்து வைத்த கைதிக்கு ஏற்பட்ட நிலைமை

Report Print Steephen Steephen in சமூகம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தனது ஆசன வாசலில் மறைத்து வைத்திருந்த கையடக்க தொலைபேசியை வெளியில் எடுப்பதற்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசியை வெளியில் எடுக்க வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையின் மருத்துவர்கள் முயற்சித்த போதிலும் அது முடியாமல் போனதால், அந்த கைதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கைதி ஹெரோயின் போதைப் பொருள் வழக்கு ஒன்றில் ஆஜர்ப்படுத்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வரும் போது எவரிடம் இருந்தோ கையடக்க தொலைபேசியை பெற்று அதனை ஆசன வாசலில் மறைத்து சிறைக்குள் எடுத்து வந்துள்ளார்.

அதனை வெளியில் எடுக்க முடியாது கைதி சிரமத்திற்கு உள்ளாகியதால், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெளியில் எடுக்க முயற்சிக்கப்பட்டதுடன் அது முடியாமல் போகவே தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.