சம்பூர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சம்பூர் விதுர கடற்படை தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்படிருந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்துள்ளார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே மேற்படி நால்வருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.