திருப்பழுகாமத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Report Print Kumar in சமூகம்
65Shares

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பக்கத்திலேயே இந்த சடலம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட சடலம் குறித்த வீட்டில் வசித்துவந்த 64வயதுடைய தில்லையம்மா புவனசிங்கம் என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் மகள் பிள்ளைகளுடன் வசித்துவந்த நிலையில் இன்று காலை குறித்த பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரி, நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோததனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.