வவுனியா - பெரியகாடு இராணுவ முகாமில் வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் தங்க வைக்கப்பட்டிருந்த 17 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களை விசேட விமானத்தில் அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு பெரியகாடு இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 17 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் .
பதுளை, மாத்தறை, கண்டி, கம்பஹா மற்றும் குருநாகல் பகுதிகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டதுடன், தமது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெரியகாடு இராணுவ முகாம் அதிகாரி தெரிவிக்கையில்,
இலங்கையிலிருந்து தொழில் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு சென்றவர்கள் இலங்கைக்கு திரும்பி வரும்போது இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தல் செயல்முறைகளுக்கு உட்படவேண்டும் . இவ்வாறு அழைத்து வருபவர்கள் அச்சமடையத் தேவையில்லை.
இந்நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் தங்களது குடும்ப உறவினர்களையும் பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் பணியில் அச்சமின்றி பங்கேற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.