கல்குடாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம் : மேலுமொருவர் படுகாயம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் படுகாயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு -கும்புறுமூலை , பாசிக்குடா வீதியில் நேற்று இரவு ஒன்றன் பின் ஒன்றாக சென்ற மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியுமே மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரான் பிரதேசத்தை சேர்ந்த அருமைத்துரை கிருஷாந் வயது என்ற 21 வயது இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் கருவாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய சிதம்பரப்பிள்ளை சிவநேசராஜா என்பவரே காயமடைதுள்ளார்.

காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.