வடக்கில் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்!

Report Print Ajith Ajith in சமூகம்

வடக்கில் இடம்பெறும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை அதிபர் சஞ்சீவ தர்மரட்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமூக விரோதிகளை அடக்குவதற்கு முப்படைகளின் உதவிகள் தேவை ஏற்படின் அவர்களின் உதவியுடன் குழுக்களின் சமூக விரோத செயற்பாடுகள் அனைத்தும் அடக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி காவல்மா அதிபராக இன்று காங்கேசன்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனைகள், சட்ட ஒழுங்கு விதி முறை மீறல்கள், வன்முறை குழுக்களின் அடாவடிகள் அனைத்துக்கும் எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

இனியும் அவ்வாறான குழுக்கள் இயங்கினால் அவர்களுக்கு எதிராக நீதியாக செயற்பட்டு அவற்றின் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.