இலங்கையின் கொரோனா நிலவரம்! வெளியான அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 3324 ஆக உயர்ந்துள்ளது. இன்று இரவு வரை 12 பேர் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ரஸ்யாவில் இருந்து வந்த ஒருவர், அமெரிக்காவில் இருந்து வந்த இருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேர், எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவர் என 12 பேர் இன்று தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.

11 பேர் இன்று தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 3129 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் 182 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரையில், இலங்கையில் கொரோனா காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.