வெலிஓயா பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நஞ்சருந்தி மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் இன்றைய தினம் வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நஞ்சினை அருந்தியுள்ளார்.
இந்நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். வெலிஓயா பகுதியை சேர்ந்த 41 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.