மனைவி உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவர்

Report Print Vethu Vethu in சமூகம்
434Shares

நுவரெலியாவில் மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் கணவர் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.

ராகல பிரதேசத்தில் சீதா லட்சுமி என்ற அவரது மனைவி உயிரிழந்த சோகத்தில் வெள்ளையன் கருப்பையா என்ற 70 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த இருவரும் அந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். மனைவி சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டுள்ளார். அவரை பார்த்துக் கொண்ட கணவர் இவ்வாறான முடிவை எடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியின் மகள் வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்றார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நோய் தீவிரமடைந்து மனைவி உயிரிழந்த நிலையில் அன்பாக பார்த்துக் கொண்ட கணவர் மனமுடைந்த நிலையில் விஷமருந்தியுள்ளார். அத்துடன், மனைவியின் கட்டில் மீது படுத்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.