அடிப்படை வசதிகளை வழங்கக்கோரி கிரான் பகுதி மக்கள் போராட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு- கிரான்,முள்ளிவட்டுவான் பிரதேச மக்கள் தங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கோரி கவனயீர்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்பாட்டம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவட்டுவான் பாலர் பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பிரதேச மக்கள் தங்கள் பிரதேசத்தில் நிலவும் பொது மயானம், விளையாட்டு மைதானம் இன்மை, குடி நீர் பிரச்சினை, யானை வேலி அமைத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரும்படியும், குடியிருப்பு காணிகளை வன இலாகாவினால் சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தககோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச மக்கள் கிழக்கு மாகாண ஆளுனர்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஓட்டமாவடி பிரசே சபை தவிசாளர் ஆகியோருக்கான மகஜரினை ஓட்டமாவடி பிரதேச சபையின் வாகனேரி வட்டாரத்திற்கான உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரனிடம் கையளித்துள்ளனர்.