வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்
564Shares

பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான தேவமுனி ஹெரல் டி சில்வா என்படும் இரத்மானை ரோஹா என்பவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு, கொச்சிகடை பிரதேசத்தில் ட்ரோலர் இயந்திரத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலத்தை சோதனையிட்ட போது டீ.56 ரக துப்பாக்கி, மற்றும் இந்திய பணம் 3 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் போதைப்பொருள் வர்த்தகம், மனித கொலை மற்றும் கொள்ளை உட்பட குற்ற செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.