ரயிலுடன் மோதிய பாடசாலை வான் - நொடிப்பொழுதியில் உயிர் தப்பிய 17 மாணவர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்கா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வான் ஒன்று ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எப்படியிருப்பினும் விபத்தில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுநாயக்கா சரத் மாவத்தையில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் சிலாபம் - கொழும்பு ரயிலில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வானில் பயணித்த 17 மாணவர்கள் மற்றும் சாரதி நொடிப்பொழுதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.