மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு வடக்கைச் சேர்ந்த 35 வயதுடைய இரத்திணசிங்கம் உதயன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அயல் வீட்டிலிருந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.