தியாக தீபம் திலீபனுக்காக புலம்பெயர் நாடுகளில் தமிழர்களை ஒன்று திரளுமாறு வேண்டுகோள்..

Report Print Gokulan Gokulan in சமூகம்
127Shares

பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாளைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிப்பதற்கு பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவு தினத்தை நினைவுகூருவதற்கு, இலங்கையில் அரசாங்கத்தினால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அவரவர் வசிக்கும் நாடுகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே நாளைய தினம் லண்டனில் குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு தமிழர்களாகிய அனைவரும் ஒன்றுதிரளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலினை நண்பர்களுக்கு அலைபேசியூடாக அறியத்தருவதுடன் ஒன்று கூடுவதன் தேவையையும் அவசியத்தையும் தெளிவுப்படுத்துமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்விற்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அத்துடன் மெழுகுவர்த்தி மற்றும் தியாக தீபம் திலீபனின் புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை 4.12 மணிக்கு திலீபனின் உருவப்படத்திற்கு விளக்கேற்றவும், ஆறு - ஆறு நபர்களாக பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பேணி அஞ்சலி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை 3மணியளவில் மக்கள் வருகை அமைந்தாலும், வரக்கூடியமக்கள் வரும்வரை சற்று தாமதித்து 4.12 ( அதாவது 12 நாட்களாக தன்னை இனத்தின் விடுதலைக்காக உருக்கிய நாட்களை நினைவுபடுத்தும் வகையில் 4.12) திலீபனின் படத்திற்கு தீபமேற்றி மலர் வணக்கம் செலுத்துமாறு ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.