கிளிநொச்சியில் மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக விபத்தால் முறிந்து விழுந்த பாரிய மரம்

Report Print Suman Suman in சமூகம்
81Shares

கிளிநொச்சியில் மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக ஏ9 வீதியில் ரிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு கல்லுடன் பயணித்த ரிப்பர் வாகனத்தின் வில்லுத்தகடு உடைந்ததில் குறித்த விபத்து இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது குறித்த ரிப்பர் வாகனம், பயணித்த திசையைவிட்டு வீதியின் மற்றைய திசைக்கு சென்று மரமொன்றுடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.