வவுனியாவில் புகையிரதப்பாதை அமைப்பதற்குரிய கால அவகாசம் தொடர்பில் மக்கள் விசனம்

Report Print Theesan in சமூகம்
85Shares

வவுனியா- ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புதிய புகையிரதக்கடவை பாதையொன்று அமைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதும் அதற்கான நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பன்றிக்கெய்தகுளத்தில் புகையிரதக்கடவை பாதை அமைப்பது தொடர்பிலான கூட்டத்தில் புகையிரதத்திணைக்களம், ஓமந்தை கிராம அபிவிருத்திச்சங்கம், ஓமந்தை பொலிஸார், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கு.திலீபன் , தமிழ் தெற்கு பிரதேச சபைத்தவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்று வழிப்பாதை அமைப்பதற்கு முடிவு எட்டப்பட்டிருந்ததுடன், அதனை நிறைவு செய்துக்கொள்வதற்கு ஒரு மாத காலம் அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் அப்பாதை அமைப்பதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனை உடனடியாக அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து உறவினர்களை பார்வையிடுவதற்காக கார் ஒன்றில் நால்வர் பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புகையிரதக்கடவையை கடந்தபோது எதிரே வந்த புகையிரதம் காருடன் மோதியபோது அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து அப்புகையிரத கடவை பாதுகாப்பு அற்றதாகவும், அதனை மூடுவதற்கும் புகையிரத திணைக்களம் முடிவு எடுத்திருந்தது.

இதையடுத்து பல்வேறு இழுபறி நிலைகளுக்கு பின்னர் கடந்த மாதம் அப்பாதையை மூடிவிட்டு அதற்கு மாற்றீடாக சற்றுத் தொலைவில் புதிய புகையிரதக்கடவை ஒன்றினை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் இணைந்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு உடனடியாக அங்கு பாதையை அமைப்பதற்கு தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை எடுப்பதாக அங்கு வாக்குறுதியளித்திருந்தார்.

இதில் கலந்து கொண்ட புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இப்புதிய பாதையின் பணிகளை ஆரம்பித்து நிறைவு செய்துகொள்வதற்குரிய கால அவகாசமதக ஒரு மாதம் வழங்கப்பட்டடிருந்தது.

தற்போது ஒரு மாதம் கடந்தும் புகையிரதப்பாதை அமைப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.