இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை தொடர்பான இன்றைய நிலவரம்!

Report Print Ajith Ajith in சமூகம்
148Shares

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று இரவு வரை 3329ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மாத்திரம் 5 தொற்றாளிகள் இலங்கைக்குள் இனங்காணப்பட்டனர்.

ஈரானில் இருந்து வந்திருந்த இரண்டு ஈரானியர்கள், குவைத்தில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர், மாலைத்தீவில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்த வந்த இலங்கையர் ஒருவர் ஆகியோரே நேற்று இனங்காணப்பட்டவர்களாவர்.

இந்நிலையில் வைத்தியசாலைகளில் 174 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் தொற்றில் இருந்து 3142 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.