சர்வதேச சைகை மொழி தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

Report Print Theesan in சமூகம்
58Shares

செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி சர்வதேச சைகை மொழி தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனையொட்டி செப்டெம்பர் 21 திகதி தொடக்கம் 27 திகதி வரை சைகை மொழி வாரமாக பிரகடனம் செய்து பல விழிப்புணர்வு செயற்திட்டங்கள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் இன்று வவுனியா மாவட்ட சைகை மொழி தினம் வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் விழிப்புணர்வு செயலமர்வாக நடைபெற்றுள்ளது.

மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்தலைவர் நிசாந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், அகில இலங்கை செவிப்புலனற்றோர் சங்கத்தலைவர் கனநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்துள்ளனர். டிலானி வளவாளராக கலந்து சைகை மொழிபெயர்ப்பில் உதவியுள்ளார்.

இந்நிகழ்வில் கேட்பதில், பேசுவதில் சிரமமுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளடங்கலாக அடங்கிய மகஜர் ஒன்றும் வவுனியா அரச அதிபர் சமன் பந்துல சேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி சகல தரப்பினரையும் அழைத்து இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்கு அரச அதிபர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.