ஒரு குழந்தை உட்பட 174 இந்திய பொதுமக்கள் இன்று இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
கொழும்பில் இருந்து மும்பை மற்றும் புதுடெல்லிக்கு சிறப்பு ஏர் இந்தியா வானூர்தி மூலமாக 174 இந்திய பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டுக்கு திருப்பி எடுக்கும் ‘வந்தே பாரத் மிஷன்’ இன் ஒரு பகுதியாக 174 இந்தியர்களும் இன்று இலங்கையில் இருந்து திருப்பியனுப்பப்பட்டனர்.
ஏர் இந்தியா, தனியார் மற்றும் வெளிநாட்டு கப்பல்கள், கடற்படைக் கப்பல்கள் மூலம் ‘வந்தே பாரத் மிஷன்” ஊடாக இதுவரை உலகெங்கிலும் இருந்து 13 லட்சம் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திருப்பியழைத்து செல்லப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு செல்வதற்காக தங்களை இந்திய உயர்ஸ்தானிகரத்தில் பதிவுசெய்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.