இலங்கை அரசுக்கு ரூ. 340 மில்லியன் செலுத்த எம்.ரி. நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர் இணக்கம்

Report Print Rakesh in சமூகம்
160Shares

இலங்கையால் கோரப்பட்டுள்ள 340 மில்லியன் ரூபாவைச் செலுத்துவதற்கு தீ விபத்துக்குள்ளான 'எம்.ரி. நியூ டயமண்ட்' கப்பலின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

கிழக்குக் கடலில் எரிந்துக்கொண்டிருந்த கப்பலைப் பாதுகாப்பாக மீட்பதற்கு இலங்கைக் கடற்படையினரும், கடற்பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான செலவீனங்களை கப்பலின் உரிமையாளர் ஈடு செய்ய வேண்டும் என்று இலங்கை அரசின் சார்பில் கோரப்பட்டிருந்தது.

இதன்படி, 340 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சட்டமா அதிபர் அந்தக் கப்பல் நிறுவனத்துக்கு கோரிக்கை கடிதத்தை கடந்த வாரத்தில் அனுப்பி வைத்திருந்தார்.

இதற்கமைய அந்தத் தொகையைச் செலுத்துவதற்குக் கப்பலின் உரிமையாளர் இணங்கியுள்ளார் என்று அந்த நிறுவனத்தால் இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.