பொதுமக்கள் முறைப்பாடுகள் குழுவின் தலைவராக அமைச்சர் காமினி லொக்குகே நியமனம்!

Report Print Ajith Ajith in சமூகம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் முறைப்பாடுகள் குழுவின் தலைவராக அமைச்சர் காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் தலைவராக காமினி லொக்குகேயின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட முன்மொழிந்தார். ஜகத் புஷ்பகுமார அதனை வழிமொழிந்தார்

பொதுமக்கள் முறைப்பாடுகள் குழுவின் முதல் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றபோது இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக்குழுவில் அமைச்சர்கள், தயாசிறி ஜயசேகர, எஸ். வியாழேந்திரன், தேனுக விதானகமகே, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திலிப் வெதாராச்சி, காதர் மஸ்தான், அசோக பிரியந்த, முஜிபுர் ரஹ்மான், குலசிங்கம் திலீபன், நிப்புன ரணவக்க, கீதா குமாரசிங்க, ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் இந்தக்குழுவின் உறுப்பினர்களாவர்.