கொழும்பில் வெடிப்பு சம்பவம்! எட்டு பேர் படுகாயம்

Report Print Murali Murali in சமூகம்
1823Shares

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.