ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - அழிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக தனக்கு முன்கூட்டியே புலனாய்வு தகவல் கிடைத்திருந்தாகவும் அந்த புலனாய்வு தகவலை தாம் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கியதாகவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்லாது தாம் அந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு இதனை அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவித்துள்ள பூஜித் ஜயசுந்தர, தாம் எடுத்த அந்த தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை யாரோ அழித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

அப்போது இலங்கை டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்களின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன பணியாற்றியதாகவும் இந்த தொலைபேசி உரையாடல்கள் அழிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.