ஒன்றாக மதுபானம் அருந்திய நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நேர்ந்த விபரீதம்

Report Print Steephen Steephen in சமூகம்

அவிசாவளைக்கு அருகில் கொஸ்கொட, கொடகம பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொட, கொடகம பிரதேசத்தில் வசித்து வந்த 34 வயதான சமந்த ஜயலத் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த நபரும், கொல்லப்பட்ட நபரும் ஒரே கிராமத்தில் வசிக்கும் நண்பர்கள் எனவும், நேற்றிரவு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர் என தெரியவருகிறது.

இந்த நிலையில் இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த கொலை நடந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொஸ்கொட பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.