கொழும்பில் நாளை இரவு முதல் 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

Report Print Rakesh in சமூகம்
140Shares

கொழும்பில் நாளை இரவு முதல் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை இரவு 8 மணி முதல் நாளைமறு தினம் காலை 6 மணி வரையில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 இற்கு உட்பட்ட பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு - 11 பகுதியில் இந்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.