ஐரோப்பிய நாடொன்றில் இருந்து அச்சுறுத்தல் விடுத்துள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்

Report Print Steephen Steephen in சமூகம்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான “கோனாகோவிலே ரோஹா” என்ற நபர் பொலிஸாருடன் நேற்று இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது இத்தாலியில் வசித்து வரும் போதைப் பொருள் கடத்தல்காரான “குடு அஞ்சு” என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில், ரோஹாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் நபர்களை கொலை செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் விளையாட்டு முடிந்தது "Game over" என்ற பதிவையும் குடு அஞ்சு என்பவர் இட்டுள்ளார்.

இங்கு பிணத்தை கொண்டு வந்து இரவு விழித்திருக்க முடியாது, வைத்தியசாலையிலேயே புதையுங்கள் என்ற பதிவையும் அனைவரும் மது அருந்த தயாராகுங்கள் என்ற பதிவையும் குடு அஞ்சு என்பவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே குடு அஞ்சு மற்றும் தர்மகே ஆகியோரின் ஹெரோயின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட பணத்தை பரிமாற்றம் செய்து வந்த இரண்டு பேரை மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

நீர்கொழும்பு பொலவலான மற்றும் கட்டுநாயக்க குரண ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.