மன்னாரில் தேர்தல் பிரச்சார நிதி மற்றும் தேர்தல் செயல்முறை குறித்து விழிப்புணர்வு

Report Print Ashik in சமூகம்
23Shares

தேர்தல் பிரச்சார நிதி மற்றும் தேர்தல் செயல்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த செயற்திட்டமானது இன்றையதினம் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டிருந்தது.

பெப்ரல் அமைப்பும், மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் மற்றும் பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி, பொது அமைப்பபுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தேர்தல் காலங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்யப்படுகின்ற நிதி தொடர்பாகவும், தேர்தல் தொடர்பாகவும் விழிப்புணர்வு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.