கோப்பாயில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

Report Print Sumi in சமூகம்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டிகளை திருடிச்சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது திருடப்பட்ட 25க்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரின் விசேட அதிரடி நடவடிக்கையின் போது திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துவிச்சக்கர வண்டிகளை பறிக்கொடுத்தவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்து அவற்றினை அடையாளங்காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் முப்பது சைக்கிள் திருட்டு சம்பந்தமான முறைப்பாடுகள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.