கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த வாகனத்துடன் மோதி ஒருவர் பலி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கனகராயன்குளம், கொல்லர் புளியங்குளம் பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஏ9 வீதியால் சென்றுக்கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த கப் ரக வாகனம் நேற்றைய தினம் இரவு மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது விபத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த சந்தணகுமார வயது 41 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.