ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை! இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்

மாத்தறை விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோது கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கூறப்பட்ட ரஸ்ய பிரஜைக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட இறுதிப் பரிசோதனையின்போது அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

57 அகவையைக்கொண்ட இந்த ரஸ்ய பொதுமகன், ஏனைய 15 பேருடன் தங்கியிருந்தபோதே தொற்றுக்கு உள்ளானதாக கண்டறியப்பட்டிருந்தது.

எனினும் ஏனையவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.