தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிப்பு! வர்த்தமானி வெளியானது

Report Print Murali Murali in சமூகம்

தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதற்கு அமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும், 12 - 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபாய்க்கும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மை காலங்களில் இலங்கை சந்தைகளில் தேங்காய் ஒன்றின் விலை 90 முதல் 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து நாடாளுமன்றிலும் அண்மையில் பேசப்பட்டது. இந்நிலையிலேயே, தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.