மட்டக்களப்பில் இடம்பெறவிருந்த அமைதிப்பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு - கல்லடி முருகன் ஆலயத்தில் நாளை இடம்பெறவிருந்த “அமைதிப்பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்திற்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸாரின் முறைப்பாட்டையடுத்து குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவானுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நிகழ்வு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.