வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு: தடம் புரண்ட யாழ்.தேவி புகையிரதம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

அனுராதபுரம் – சாலியபுர பகுதியில் யாழ்.தேவி புகையிரதத்தின் இரு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டுள்ளமையால் வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை 6.25 இற்கு புறப்பட்ட யாழ்.தேவி புகையிரதம் அனுராதபுரம், சாலியபுர பகுதியில் பயணித்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

புகையிரதத்தின் இரு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்ட போதும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்விபத்து காரணமாக வடக்கிற்கான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதுடன், அதனை சீர் செய்யும் நடவடிக்கையில் புகையிரத சேவை கட்டுப்பாட்டாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.