திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த மட்டக்களப்பில் பல்வேறு தரப்பினர்களுக்கும் தடை!

Report Print Kumar in சமூகம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு எதிராக மட்டக்களப்பில் ஆலயங்களுக்கும், நாடாளுமன்ற மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மட்டக்களப்பு நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் திலீபனை நினைவுகூரமுடியாது என்ற தடையுத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடாத்துவதற்கு எதிரான தடையுத்தரவு இன்று இரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது.

கல்லடியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கும், கொக்கட்டிச்சோலையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடாத்தமுடியாது என்ற தடையுத்தரவு நீதிமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.