தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஈழத் தமிழினம் என்றும் மறவாது! மாவை இரங்கல்

Report Print Murali Murali in சமூகம்

மறைந்த தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

அவருக்கு திரையுலகம் சார்ந்த அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவொன்றையிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஈழத் தமிழர்கள் சார்பில் தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கல்.

ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பல பாடல்களை பாடியதுடன், எமது மண்ணை என்றும் மறவாத தலை சிறந்த பாடகர் தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை என்றும் ஈழத் தமிழ் இனம் மறவாது.” என குறிப்பிட்டுள்ளார்.