கொவிட் -19 இன் தாக்கம் தொடர்பில் வவுனியா பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகள் வழங்கி வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்
26Shares

கொவிட் - 19 இன் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மாணவர்களை பாதுகாக்கும் நோக்குடன் சுகாதார வழிமுறைகளை வெளிப்படுத்திய பதாதைகள் வவுனியா பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அணுசரணையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையினரால் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தாக்கத்தில் இருந்து விடுபட மாணவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் முறை தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்று செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட செட்டிகுளம் மகாவித்தியாலயம், அல் - இக்பால் மகாவித்தியலாயம் உள்ளிட்ட பல பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.