மாத்தறை ஹோட்டலில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறல்! வைத்திய நிபுணர் குற்றச்சாட்டு

Report Print Murali Murali in சமூகம்

கொரோனா தொற்றுக்குள்ளான ரஸ்ய நாட்டவர் ஒருவர் மாத்தறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹோட்டலில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சில ஹோட்டல் ஊழியர்களைத் தவிர, ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தவர்களில் சிலர் கூட பகிரங்கமாக வெளியே சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு தனிமைப்படுத்தல் மையத்தின் பணியாளர்கள் அந்த இடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கடைசி நபர் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து 14 நாட்கள் அந்த இடத்தில் இருக்க வேண்டும்.

எனினும், குறித்த ஹோட்டலில் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை மீறி சில ஊழியர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ஹோட்டலை விட்டு வெளியேறியவர்கள் யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.