வெளிநாடுகளில் சிக்கியிருந்த 314 பேர் நாட்டிற்கு வருகை

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை திரும்ப முடியாது நான்கு நாடுகளில் தங்கியிருந்த 314 இலங்கையர்கள் அந்நாடுகளில் இருந்து நான்கு விமானங்களில் இன்று அதிகாலை மற்றும் மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

முதலாவதாக இன்று அதிகாலை 12.15 அளவில் அபுதாபியில் இருந்து 24 பேரும், பின்னர் அதிகாலை 1.45 அளவில் தோஹாவில் இருந்து 46 பேரும், அதிகாலை 5.15 அளவில் கட்டாரில் இருந்து 27 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து இன்று மதியம் 11. 15 அளவில் ஜேர்மனியின் பிராங்க்பேர்டில் இருந்து 217 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.